ரஜினிக்காக இளம் நடிகைகளை பட்டியலிட்ட சிவா…!

39

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, நிவேதா  தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படம் வரும் 2020 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. “தர்பார்” படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.


தற்காலிகமாக இப்படத்திற்கு “தலைவர் 168” என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. முதலில் இப்படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக பரவலாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில், ரஜினி, சிவாவிடம், இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க, இதுவரை என்னுடன் நடிக்காத நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி படக்குழுவும் சில நடிகைகளை பட்டியலிட்டு வைத்துள்ளது.


தற்போது ரஜினிகாந்த் சில நாட்கள் இமயமலை பயணம் சென்றுள்ளார். ரஜினி திரும்பி வந்ததும், படக்குழுவினர் பட்டியலிட்ட நடிகையை ரஜினி தேர்வு செய்வார்.