ஜெயராம் தான் நேசமணி ட்ரெண்டிங்காக காரணம் – டைரக்டர் சித்திக்

68

சமீபத்தில ட்ரெண்டிங்கான நேசமணி கதாபாத்திரம், ப்ரண்ட்ஸ் படத்துல வந்த ஒரு காட்சியாகும். அப்றம் அந்த படத்துல நடிச்ச வடிவேலு, ரமேஷ் கண்ணா, சார்லி இந்த விஷயம் ட்ரெண்டிங் ஆனது பத்தி பல விதமா பேட்டி கொடுத்தாங்க. ஆனா அந்த படத்தோட டைரக்டர் சித்திக்,மோகன்லாலை வச்சு ஒரு படத்த டைரக்ட் பண்ணி வரதால இத பத்தி பேச முடியல,சமீபத்தில நேசமணி கேரக்டர் பத்தி ஒன்னு சொல்லிருக்காரு.


அதாவது ‘இந்த படம் முதல்ல மலையத்துல எடுத்த பிறகு தான் தமிழ்ல ரீமேக் பண்ணது.மலையாளத்துல இந்த படத்தோட சீன்ஸ் எடுக்குறப்போ நேசமணி கேரக்டர் தலையில சுத்தியல் விழுவது போல சீன்ஸ் எல்லாம் கடைசிநாள் தான் எடுத்தோம் . அதுமட்டுமில்லாம இந்த படத்தை எடிட் பண்றப்போ, சீன்ஸ் நீளமா இருக்குறதுனால நேசமணி – சுத்தியல் சம்மந்தமான சீன்ஸ் நீக்க முடிவு செஞ்சாராம் சித்திக்.


ஆனா அந்த படத்துல ஹீரோவா நடிச்ச ஜெயராம் சொன்னதுனால அந்த சீன் எடுக்காம படத்திலேயே வச்சிட்டாராம் டைரக்டர் சித்திக். மலையாளத்துல மிகப்பெரிய லெவல்ல ரசிகர்களை திரும்பி பாக்க வச்சதால அந்த சீன் தமிழில் ரீமேக் செய்றப்போ, இங்கேயும் அப்படியே இருக்கட்டும்னு ப்ரொடியூஸர் சொல்லிட்டாராம். அதனால தமிழ்லையும் நேசமணி தலையில சுத்தியல் விழும் சீன் தவறாம இடம் பிடிச்சிருக்குனு சொல்லிருக்காரு டைரக்டர் சித்திக்.