“களத்தில் சந்திப்போம்”.!  லோகேஷ் கனகராஜுக்கு சாவல் விட்ட  இயக்குனர்…!

59

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் “பிகில்”. இதனை இதனை தொடர்ந்து விஜய்- லோகேஷ் கனகராஜ் ஓயக்கத்தில் நடித்து வருகிறார்.


“பிகில்” படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலர் வெறித்தனமாக காத்துக்கொண்டிக்கினர். அதில் ஒருவர் இயக்குனர் ரத்னகுமார், இவர் சமீபத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான “ஆடை” படத்தை இயக்கியவர்.


இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர், ரத்னகுமார் இயக்கிய முதல் படமான “மேயதாமான்” படம் இரண்டு வருடங்களுக்கு முன் “மெர்சல்” படத்துடன் மோதியது. அதற்கு தான் இயக்கிய படத்தை விட்டுவிட்டு மெர்சல் முதல் காட்சியை பார்த்துள்ளார்.


இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ரத்னகுமாரும் நெருங்கிய நண்பர்கள். வரும் தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய  “கைதி” படமும் விஜய்யின் “பிகில்” படமும் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “2 ஆண்டுகளுக்கு முன் அக்.17ம் தேதி எனது படம் ‘மேயாதமான்’ மிக பிரம்மாண்டமான தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ படத்துடன் ரிலீசானது. ஆனால், நான் மெர்சல் FDFS காட்சியை பார்த்தேன். தற்போது நண்பனின் கைதி படம், பிகில் படத்துடன் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இப்போதும் பிகில்  FDFS-க்கு தான் செல்வேன். களத்தில் சந்திப்போம் நண்பா” என இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.  

Image result for kaithi and bigil


மேலும்,விஜய் ரசிகர்களும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தை பார்ப்பதற்கு தயாராக தான் இருக்கிறார்கள்.