கே.வி.ஆனந்துடன் இணைய ஆசைப்படும் தளபதி  விஜய்…!  

பார்வையாளர்களின் விமர்சனம் கே.வி.ஆனந்துடன் இணைய ஆசைப்படும் தளபதி  விஜய்…!   0.00/5.00

இயக்குனர் கே.வி. ஆனந்த் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து “காப்பான்” என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு எதிராக ஒரு சிலர் வழக்கு தொடர்ந்தனர். இது சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


சமீபகாலமாக ரசிகர்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதை  தவிர்த்துவிட்டு நெட்ப்ளிக்ஸ், அமேசான் என்ற இணையத்தின் வழியாக பார்க்கின்றனர்.


திரையரங்கில் வெளியாகி ஒரு சில நாட்களில் இந்த இணையத்தில் வெளியாவதால், திரையரங்கிற்கு போட்டியாக இணையம் வந்துவிட்டது. 


மேலும் இணையத்தில் வெளியிடுவதற்கு என்றே சிலர் வெப் சீரிஸ் என்பதை எடுத்து வருகிறார்கள். அதில், தற்போது முன்னணி நடிகர்களும் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.


இதுகுறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறுகையில், சில இயக்குனர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் சொல்லிக்கூடிய நிறையபேர் வந்துவிட்டார்கள். போட்டி கடுமையாக இருக்கிறது.


அமேசான், நெட்ப்ளிக்ஸ் என திரையரங்கிற்கு போட்டியாக இணையம் வந்துவிட்டது.  பத்து நாளில் படம் பார்க்கவில்லை என்றாலும் இன்னும் பத்து நாளில் எப்படியும் அமேசான் அல்லது நெட்ப்ளிக்ஸில் வந்துவிடும் என்று காத்திருக்கலாம் என்ற மனநிலை மக்களிடையே வந்துவிட்டது.

கற்பு பற்றிய கேள்வியால் கடுப்பான இலியானா…!


மேலும், நடிகர் விஜய் “நாம் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று கேட்டுருக்கிறார். நானும் கண்டிப்பாக பண்ணலாம் என்று சொல்லிருக்கிறேன். அஜித் விளம்பரங்களில் நடித்த காலத்திலிருந்தே எனக்கு பழக்கம். எனக்கு திருப்தியாக ஒரு கதை தயாரானால் மட்டுமே நாயகனை சந்திக்கும் பழக்கமுடையவன் நான்” என்று தெரிவித்துள்ளார்.