மீண்டும் “தர்பார்” புகைப்படங்கள் லீக்…! தலைவலியில் படக்குழு..!

பார்வையாளர்களின் விமர்சனம் மீண்டும் “தர்பார்” புகைப்படங்கள் லீக்…! தலைவலியில் படக்குழு..! 0.00/5.00

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “தர்பார்” படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தொடர்ந்து லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.


தற்போது இந்த படத்தின் படபிடிப்பு ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன் மும்பையில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது சில புகைப்படங்கள் வெளியானது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி போலீஸ் கதாபத்திரத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

லீக்கான புகைப்படம்


இதனால் படக்குழு படப்பிடிப்பு தளத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை மீறி தற்போது ரஜினி மற்றும் நயன்தாரா இருவரும் நிற்கும் புகைப்படங்கள் லீக்காகி படக்குழுவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.