“தர்பார்” படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!

பார்வையாளர்களின் விமர்சனம் “தர்பார்” படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…! 0.00/5.00

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “தர்பார்”. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில், நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பாடல் நவம்பர் மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.


இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு உரிமையை என்.வி.பிரசாத் கைப்பற்றியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் தெலுங்கில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்