நீங்கள்தான் என் நம்பிக்கை! தனுஷ் பரபரப்பு அறிக்கை!!

பார்வையாளர்களின் விமர்சனம் நீங்கள்தான் என் நம்பிக்கை! தனுஷ் பரபரப்பு அறிக்கை!! 0.00/5.00

தனுசுக்கு நடிகர் என்ற பெயர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல பெயர்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு பெயர் பெற்று தந்தவர்.


இவர் தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் திரையுலகிலும் கலக்கி விட்டு வந்தவர். இவர் அடுத்ததாக ஒரு இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இவருடைய 36வது பிறந்த நாள் நேற்று(ஜூலை 28) கொண்டாடப்பட்டது. இவருக்கு பல சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.


வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்களின் அளவுகடந்த அன்பு தான் என்னை ஊக்கவித்து ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் தான் என்னுடைய நம்பிக்கை என்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.