கீர்த்தி சுரேஷ், கார்த்தி சுப்புராஜ் படம் உறுதியானது!!

28

இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ் பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார்.


இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தை இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க இருக்கிறார்.


இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

Image