அஜித்துக்கு ஜோடியாகும்  பாலிவுட் நடிகை…?

40

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.


இந்த படத்தின் பூஜை இன்று(அக்டோபர் 18) சிறப்பாக போடப்பட்டது. இப்படத்திற்கு அஜித்தின் அன்பு கட்டளை படி “வலிமை” என்று தலைப்பு வைத்துள்ளனர்.


இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. அதனை முற்றிலும் படக்குழு மறுத்துள்ளது.


இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ப்ரனீதி சோப்ரா  நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Image result for parineeti chopra


இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.