அஜித்துக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்…!

பார்வையாளர்களின் விமர்சனம் அஜித்துக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்…! 0.00/5.00

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “நேர்கொண்ட பார்வை”. போனிகபூர் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தற்காலிகமாக “தல 60” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது.


இந்நிலையில், இப்படத்தில் வில்லா கதாபத்திரத்தில் நடிக்க அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.