கமலுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா..?

24

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் “இந்தியன் 2”. இப்படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இதன் படப்பிடிப்பு சில பிரச்சனைகள் காரணமாக நிறுத்தி வைக்க பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் அறிமுக நடிகர்கள் பலர் நடிக்க இருக்கின்றனர்.


இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் இதற்கு முன் “ஜிகர்தண்டா” மற்றும் “சாமி 2” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.