தீபாவளிக்கு வெளியாகும்  படங்களின் ஒற்றுமை…! ரசிகர்கள் குழப்பம்…!

53

இந்த வருட தீபாவளிக்கு மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அதாவது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்”. விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள “சங்கத்தமிழன்”. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.


இந்த மூன்று படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.


அது, அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் “தளபதி 64” படத்தை  கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.  அடுத்தபடியாக “தளபதி 64” படத்தில் சங்கத்தமிழன் படத்தில்  நடித்துள்ள விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.


எனவே இந்த தீபாவளிக்கு வெளியாகும் மூன்று படங்களையும் ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் “தளபதி 64” படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.


அதில் விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.