Youtube கதற…ட்விட்டர் பதற..! வெளியான அரசியல் இல்லாத பிகில்

பார்வையாளர்களின் விமர்சனம் Youtube கதற…ட்விட்டர் பதற..! வெளியான அரசியல் இல்லாத பிகில் 0.00/5.00

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “பிகில்” ட்ரைலர்  இன்று(அக்டோபர் 12) வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவகியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.


தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது “பிகில்” படத்தின் ட்ரைலர். எதிர்பார்த்த அளவுக்கு இதன் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுள்ளது.


பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில் பெண்கள் செண்டிமெண்ட் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லலாம். 


இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் சம்மந்தமான வசனங்கள் பெரிதும் பேசப்பட்டு வந்தன. அதை வைத்து பார்க்கும் போது படத்தில் அரசியல் சம்மந்தமான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால், தற்போது வெளியாகியுள்ள “பிகில்” படத்தின் ட்ரைலரில் அரசியல் சம்மந்தமான எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை. எனவே கால்பந்து அரசியல் படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.