செப்டம்பர் மாதத்தை கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்..!

64

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


சமீபத்தில் இப்படத்திலிருந்து “சிங்கப்பெண்ணே” பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்ததாக “வெறித்தனம்” பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில், இப்படத்தின் வெறித்தனம் பாடல் கூடிய விரைவில் வெளிவரும் எனவும், அதுமட்டுமின்றி செப்டம்பர் மாதம் முழுவதும் ‘பிகில்’ படத்தின் அப்டேட்கள் தினமும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.


இதனையடுத்து விஜய் ரசிகர்கள் செப்டம்பர் மாதத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.