“பிகில்”, “விஸ்வாசம்” ஒரு சென்டிமெண்டான ஒப்பீடு..!

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பிகில்”. பல பிரச்சனைகளை கடந்து இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் அதிகாலையில் அஉலகம் முழுவதும் வெளியாகியது.


முதல் காட்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராயப்பனின் மாஸ் கதாபாத்திரம், விஜய்யை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது.


இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின்  கிளைமாக்ஸில் தன் அப்பா அஜித்தை மகள் கட்டிப்பிடித்து “அப்பா” என்று சொல்லும் காட்சியை காட்டிலும் “பிகில்” படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் சில இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


“பிகில்” படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், பெண்களை நம் சமூகத்தில் எந்த அளவிற்கு கீழ் தரமாக நினைக்கிறார்கள் என்றும் அதனை உடைத்தெறிந்து பெண்கள் அந்த கால்பந்து விளையாட்டில் வெற்றிபெற்று விஜய்யை  கட்டிப்பிடித்து அழுகும் காட்சி மிகவும் சென்டிமெண்டாக இருந்ததாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

பிளிக்ஸ்வூட் சார்பாக இந்த படத்தின் விமர்சனத்தை கேட்க்கும் போது, பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.