ரசிகர்களை ஏமாற்றிய “பிகில்” படக்குழு…! 

பார்வையாளர்களின் விமர்சனம் ரசிகர்களை ஏமாற்றிய “பிகில்” படக்குழு…!  0.00/5.00

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, சத்யராஜ், கதிர், விவேக். யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்த அப்டேட் இந்த மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.


அதன்படி, கடந்த வாரம் வெறித்தனம் பாடல் வெளியாகி சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்று. 

பிகிலுக்காக வெறிகொண்டு காத்திருக்கும் யாஷிகா..!


இப்படத்தின் டீசருக்கு பதிலாக படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.