“பிகில்” புரோமோஷனில் ஆளும் கட்சியினர்..?

பார்வையாளர்களின் விமர்சனம் “பிகில்” புரோமோஷனில் ஆளும் கட்சியினர்..? 0.00/5.00

ஏஜிஎஸ் என்டர்டைமென்ட் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள “பிகில்” படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று (செப் 19) நடைபெற இருக்கிறது. 


அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இதில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், கதிர், விவேக், யோகிபாபு, ஆனந்த ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


நேற்று(செப் 19) இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Image result for bigil


ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி விஜய் மேடையில் ஒரு குட்டி கதை சொல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் கதை சொல்லாமல் ரசிகர்களுக்கு பல அறிவுரைகளையும், அரசியல் குறித்தும் பேசியுள்ளார்.


இவ்விழாவில் விஜய் பேசும்போது, சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர்  வைத்தவர்களை கைது செய்யாமல் பேனர் அடித்தவர்களையும், லாரி டிரைவரையும் கைது செய்தது குறித்து பேசினார்.


அடுத்ததாக, சர்கார் வெளியிட்டில் போலீசார் ரசிகர்களை அடித்து அவர்கள் வைத்திருந்த பேனரை கிழித்து ஆளும் கட்சியினர் அராஜகம் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “பேனரில் என் முகத்தை கிழியுங்கள், உடையுங்க ஆனால் என் ரசிகர்கள் மீது கைவைக்க வேண்டாம்” என்று ஆவேசமாக பேசினார்.


மேலும், ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை சொல்லியுள்ளார். ஆளும் கட்சியை சாடி பேசியுள்ள விஜய்யை நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதற்கு ஆளும் கட்சி தரப்பில் இருந்து நேற்றே விமர்சனம் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று(செப் 20) அதிமுக அமைச்சர் ஒரு பேட்டியளித்துள்ளார்.


அதில், விழாவில் விஜய் பேசியதற்கு பதில் அளித்தார். தற்போது மொத்தத்தில் மெர்சல், சர்கார் படங்கள் போன்று இந்த படத்திற்கும் ஆளும் கட்சியினர் விளம்பரம் இலவசமாக செய்து கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.