பிகிலுக்கு எத்தன பேருதான்யா சொந்தம் கொண்டாடுவீங்க? எகிற வைக்கும் டென்ஷன்!

22

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள “பிகில்” படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இப்படம்  அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இப்படம் தெலுங்கில் “விசில்” என்று பெயரில் தமிழில் வெளியாகும் அதே நாளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் உதவி இயக்குனர் செல்வா “பிகில்” கதை என்னுடையது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று இன்னொரு புகார் எழுந்துள்ளது.


தெலுங்கு நடிகர் சின்னிகுமார், அட்லீ மீது தெலுங்கு திரைப்பட  தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பிரபல கால்பந்து வீரர் அகிலேஷ் பால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை ’ஸ்லம் சாக்கர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கானா சினிமா கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், இந்த படத்தை உருவாக்கும் பணியில் தான் இருந்தபோது, இந்த படத்தின் கதையும் ‘விசில்’ கதையும் ஒன்று என தனக்கு தெரிய வந்ததாகவும், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.