“பிகில்” இசை வெளியீட்டு குறித்த அப்டேட்…!

பார்வையாளர்களின் விமர்சனம் “பிகில்” இசை வெளியீட்டு குறித்த அப்டேட்…! 0.00/5.00

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் “பிகில்”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


சமீபத்தில் இப்படத்தின், “சிங்கப்பெண்ணே” பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலான “வெறித்தனம்” பாடல் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தெரியவருகிறது. அதற்க்காக படக்குழு செட் அமைத்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


“பிகில்” படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.