“பிகில்” 24 மணி நேர காட்சி…? தயாரிப்பு நிறுவனம் மனு…! 

61

ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ  இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பிகில்”. இப்படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் இப்படத்திற்கு அதிகாலை காட்சி திரையிட அனுமதி கிடைக்குமா என்று  தெரியவில்லை. 


மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை அதிகாலை வெளியிட்டால் மிகப்பெரிய வசூலை பெற்று தரும் என்று நம்பிக்கைகளில் உள்ளனர் விநியோகஸ்தர்கள்.


இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனமும், தியேட்டர் உரிமையாளர்களும் தமிழக அரசிடம் படத்தை அனைத்து மாவட்டங்களிலும் 24 நான்கு மணி நேரமும் வெளியிட அனுமதி தருமாறு ஒரு மனு அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Image result for bigil


இதனை ஒரு பொருட்டாக தமிழக அரசு எடுத்துக்கொள்ளாவிட்டாலும், தியேட்டர் உரிமையாளர்கள் படம் வெளியாகும் இரண்டு நாட்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.