“பிகில்” ரசிகர்களை ஆர்வக்கோளாறு என்று கூறிய அமைச்சர்…!

“பிகில்” படம் இன்று(அக்டோபர் 25) உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு முதலில் தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை.


திரையரங்குகளில் அதிகாலை காட்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. திடிரென்று தமிழக அரசு நேற்று இரவு அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கியது.


ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாலை காட்சி திரையிட தாமதமாகிவிட்டதால், ரசிகர்கள் ஆத்திரமடைந்து ரோட்டில் இருந்த சிலவற்றை உடைத்து அட்டூழியம் செய்துள்ளார்.

Image result for kadambur raju


இதுகுறித்து விளம்பர மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில்,விஜய், அஜித், ரஜினி என எந்த நடிகரின் ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வக் கோளாறில் இப்படி செய்கிறார்கள் என்று கூறினார்.