அஜித்தை ஜெண்டில்மேன் என்று சொன்ன பிக்பாஸ் சாக்சி…!

பார்வையாளர்களின் விமர்சனம் அஜித்தை ஜெண்டில்மேன் என்று சொன்ன பிக்பாஸ் சாக்சி…! 0.00/5.00

தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பிக்பாஸ் 3” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்சி அகர்வால் சமீபத்தில் வெளியேறினார். வெளியேறிய சாக்சி, கவின் மீது குற்றச்சாட்டை கூறியதோடு தனது காதலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.


இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் அஜித் நடித்து கொண்டிருந்த போது சாக்சி, அஜித்தை நேரில் சந்தித்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதனை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த புகைப்படத்துடன், நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் அஜித் என்றும், அஜித் ஒரு ஜெண்டில்மேன் என்றும், தொழிலில் நேர்மையானவர் என்றும், எந்த ஒரு பெண்ணையும் மரியாதையுடன் நடத்தக்கூடியவர் என்றும் சாக்சி அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.