இயக்குனர் இமயத்தின் பிறந்தநாள் குழப்பம்..!

பார்வையாளர்களின் விமர்சனம் இயக்குனர் இமயத்தின் பிறந்தநாள் குழப்பம்..! 0.00/5.00

இயக்குனர் இமயம் பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் தொடங்கி தமிழ் சினிமாவை கிராமப்புற மக்களுக்குஎடுத்து சென்றவர்.இவர் இயக்கிய பல படங்கள் வெற்றி அடைந்து இவருக்கென்று தனி பெயரை பெற்று தந்தது.


இந்நிலையில், இன்று பாரதிராஜா பிறந்த நாள் என சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து பாரதிராஜா தரப்பில் கேட்டபோது, இன்று 16 வயதினிலே படம் சென்சார் சான்றிதழ் வாங்கிய நாள். இதையே பிறந்தநாளாக பல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனருக்கு ஆகஸ்டு 23 தான் உண்மையான பிறந்தநாள் என்று விளக்கம் அளித்தார்கள்.