தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததால் வருத்தமடைந்த பாரதிராஜா…!

பார்வையாளர்களின் விமர்சனம் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததால் வருத்தமடைந்த பாரதிராஜா…! 0.00/5.00

ரவிஅரசு இயக்கத்தில் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் “ஐங்கரன்”. இப்படத்தின் இசை மற்றும் பாடல் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு பேசிய பாரதிராஜா, “தேசிய விருதுகள் தமிழ் படங்களுக்கு கிடைக்காதது குறித்து இயக்குனர் வசந்தபாலன் பிரச்சினையை கிளப்பினார். அது நியாயமான வேதனை. தமிழ் பட உலகில் தரமான இயக்குனர்கள் அதிகம் வந்துள்ளனர். தரமான படங்களும் நிறைய வந்துள்ளன. தமிழ் படங்களுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்பதற்கான அடிப்படையான காரணங்கள் உள்ளது.
நான் கூட அந்த குழுவில் இருந்து தகராறு செய்து இருக்கிறேன். நமக்குள்ள சூழ்நிலை சரியில்லை. திறவுகோல் போட்டு திறக்க வேண்டும். இல்லாவிட்டால் உடைக்க வேண்டும். தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்று இருந்தால்தான் தேசிய விருதுக்கு தமிழ் படங்களை அனுப்ப முடியும். இதை பலவருடங்களாக சொல்லி விட்டேன்.


யார் யாரோ உட்கார்ந்து அவர்களுக்கு வேண்டியவர்களை அனுப்புகின்றனர். 12 விருது கேரளாவுக்கும், 13 விருது ஆந்திராவுக்கும் கிடைத்துள்ளன. கர்நாடகாவுக்கும் அதிக விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் தமிழ் நாட்டுக்கு ஒரு விருது கொடுத்துள்ளனர். தமிழில் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் உள்பட நிறைய தரமான படங்கள் வந்தும் விருதுக்கு தேர்வு செய்யாதது வருத்தம் அளிக்கிறது” என்றார்.