அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிப்பது ஷாருக்கான..?  ஜூனியர் என். டி. ஆரா..?

29

இயக்குனர் அட்லீ தற்போது தளபதி விஜய்யை வைத்து “பிகில்” என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனால் இப்படம் தீபாவளிக்கு வெளியாவதில் சில சிக்கலில் சிக்கியுள்ளது.


இதனை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்று சில நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தமிழ் பட தயாரிப்பளர்கள் அட்லீ மீது கோபத்தில் உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.


இந்நிலையில், அட்லீ சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை  அட்லீ ஐபிஎல் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் அரங்கத்தில்  சந்தித்து கதை கூறியதாக சிலர் கூறி வருகின்றனர். 

Image result for shahrukh khan


மேலும், இதனை தொடர்ந்து அட்லீ ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து கதை கூறியிருப்பதாகவும் சிலர் கூறியிருக்கின்றனர். இதனை வைத்து பார்க்கும் போது அட்லீ அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க மாட்டார் என்று தெரிகிறது.