“அசுரன்” படத்தின் மாஸ் அப்டேட்…!

பார்வையாளர்களின் விமர்சனம் “அசுரன்” படத்தின் மாஸ் அப்டேட்…! 0.00/5.00

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள படம் “அசுரன்”. இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.


இதில், தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் மற்றும் அம்மு  அபிராமி நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள்  சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருக்கிறது.


அதன்படி, ட்ரைலர் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.