அசாமுக்கு நேரில் சென்று நிவாரண உதவி செய்த தமிழ் நடிகர்!

பார்வையாளர்களின் விமர்சனம் அசாமுக்கு நேரில் சென்று நிவாரண உதவி செய்த தமிழ் நடிகர்! 0.00/5.00

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி நூற்றூக்கணக்கானோர் பேர் பலியாகியிருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உணவின்றி தவித்து வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அசாமுக்கு நிவாரண உதவிகள் சென்ற வண்ணம் உள்ளன.


இந்நிலையில் தமிழ் நடிகர் ஒருவர் அசாமுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி பாரட்டுக்களைப் பெற்றுள்ளார். அவர் பெயர் அபி சரவணன். மதுரையைச் சேர்ந்த இவர் கேரள நாட்டிளம் பெண்களுடனே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், சாகசம், பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கேற்று பொதுமக்களுக்கு ஆதரவு குரல் கொடுத்திருக்கும் இவர், கஜா, ஒக்கி போன்ற புயல்களின் போதும் நண்பர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது அசாமில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களுடன் அசாம் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். அபி சரவணனின் இந்த நற்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.