“தல 61” படத்தை இயக்கும்  ஏ.ஆர்.முருகதாஸ்…?

49

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை  வைத்து “தர்பார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக வதந்தி ஏற்பட்டது.


ரஜினி அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பது  உறுதியாகியுள்ளது. எனவே ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து “தல 61” படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.


இதனை முருகதாஸ் சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில்  கூறியிருந்தார். தற்போது நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் தல 60 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அஜித், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கலாம்.