அனுஷ்கா அறுபத்தி ரெண்டு..! இதுதாங்க இப்ப ட்ரெண்டு..!!

பார்வையாளர்களின் விமர்சனம் அனுஷ்கா அறுபத்தி ரெண்டு..! இதுதாங்க இப்ப ட்ரெண்டு..!! 0.00/5.00

நடிகை அனுஷ்கா ஒரு வருடத்திற்கு பிறகு சிரமப்பட்டு தனது உடல் எடையை குறைத்து தற்போது “சைலன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா எப்படி தனது உடல் எடையை குறைத்தார் என்பதை “மேஜிக் வெயிட் லெஸ்” என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். நீங்கள் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் அதை சொல்லுங்கள்..? என பலர் அனுஷ்காவிடம் ட்விட்டர் மூலம் கேட்டனர். அதற்கு அனுஷ்கா எனது ரகசியத்தை அந்த புத்தகத்தில் படித்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.


அப்படி என்ன அந்த புத்தகத்தில் இருக்கிறது..?  “வாழ்க்கையில் எந்தெந்த கெட்ட வழிமுறைகள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நோயை வரவழைக்கிறது என்பதை புத்தகத்தின் ஒரு பகுதியும், 62 எளிய வழிமுறைகள் முலம் எப்படி ஆரோக்கியமாகவும் உடலை கட்டுக்கோப்போடு வைத்துக்கொள்வது” என்பதை மற்றொரு பகுதியிலும் விளக்குகிறது.
 
எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அனுஷ்கா வெளியிட்ட புத்தகத்தை படித்து பயன் பெறலாம்.