கிரிக்கெட் வீரருடன் காதலா..? மறுக்கிறார் அனுபமா…!

பார்வையாளர்களின் விமர்சனம் கிரிக்கெட் வீரருடன் காதலா..? மறுக்கிறார் அனுபமா…! 0.00/5.00

மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுசுடன் கோடி படத்தில் நடித்திருந்தார். தற்போது பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அனுபமாவும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.


இதுகுறித்து நடிகை அனுபமா கூறுகையில், அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது எனக்குத் தெரியும், அதை விட வேறு எதுவும் தெரியாது. எந்தவொரு முறையான தகவலும் இல்லாமல் ஒரு பெண்ணைப் பற்றி சமூக ஊடகங்களில் இதுபோன்ற இணைப்பு வதந்திகள் பரப்பப்படுவது தவறானது. நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. காதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் புரளிகள் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது போன்ற கிசுகிசுக்கள் சகஜம் தான் என்றும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.