ரஜினியாக ஆசைப்படும் அனிருத்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ரஜினியாக ஆசைப்படும் அனிருத்…! 0.00/5.00

இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” படத்திற்கு  இசையமைத்திருந்தார். தற்போது முருகதாஸ்  இயக்கத்தில் உருவாகி வரும் “தர்பார்” படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


இந்நிலையில் அனிருத், “ரஜினி – மம்மூட்டி நடித்த “தளபதி” படத்தை, யாராவது  ரீமேக் செய்தால் அதில், ரஜினி நடித்த, சூர்யா என்ற வேடத்தில்  நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், “அப்படத்தில் மம்மூட்டி நடித்த தேவா வேடத்திற்கு சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார். அதனால் நானும், சிவகார்த்திகேயனும், ரஜினி மம்மூட்டியாக உருவெடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.