செப்டம்பர் 5ல் “அடுத்த சாட்டை”…!

பார்வையாளர்களின் விமர்சனம் செப்டம்பர் 5ல் “அடுத்த சாட்டை”…! 0.00/5.00

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் “சாட்டை”. இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கி வருகிறார். “சாட்டை” படம் பள்ளி மாணவர்கள் பற்றி பேசும் படம், இதன் இரண்டாம் பாகமான “அடுத்த சாட்டை” கல்லூரி மாணவர்களை பற்றி பேசியுள்ளது.


இதன் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Image