விஜய்சேதுபதி படத்தில் இணைந்த தன்ஷிகா…!

பார்வையாளர்களின் விமர்சனம் விஜய்சேதுபதி படத்தில் இணைந்த தன்ஷிகா…! 0.00/5.00

மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார். அதில், எஸ்.பி ஜனநாதன் இயக்கும் “லாபம்” படமும் ஒன்று. இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹசன் நடித்து வருகிறார்.


மேலும், கலையரசன், ஜெகபதிபாபு, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இந்நிலையில், நடிகை தன்ஷிகா இதில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


இப்படத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த தன்ஷிகா ‘லாபம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் கேட்டுக் கொண்டபோது தான் சற்றும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டதாகவும் ஏனெனில் கதையில் உள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குனர் முக்கியத்துவம் தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக
கூறியுள்ளார்.


இவர் இதற்கு முன் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய “பேராண்மை” படத்தில் நடித்திருக்கிறார்.