Primary Menu

Top Menu

தேவர் மகன்–2 படத்தை இயக்க கமல்ஹாசன் முடிவு?

நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர்.
இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.  கமல்ஹாசன் தற்போது டெலிவி‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இரண்டு வாரத்தில் இது முடிய இருக்கிறது.
அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்–2 படத்தில் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தோடு தேவர் மகன்–2 படப்பிடிப்பையும் தொடங்குவார் என்றும் தேர்தலுக்கு முன்பு இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டு வருவார் என்றும் பேசப்படுகிறது.

Leave a Reply