Primary Menu

Top Menu

காசியில் ரஜினிகாந்த் வழிபாடு!!

நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.  இப்போது லக்னோவில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ‘பேட்ட’ படத்துக்காக வைத்துள்ள முறுக்கு மீசை தோற்றத்திலேயே சென்றார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள நாகலிங்கத்துக்கு ரஜினிகாந்த் பால் ஊற்றி வழிபட்டார்.
ரஜினிகாந்த் கோவிலுக்கு வந்த செய்தி பரவி கூட்டம் அலைமோதியது. அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். பலத்த பாதுகாப்புடன் ரஜினிகாந்த் கோவிலில் இருந்து வெளியேறினார்.
நிருபர்களிடம், “காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவதற்காக வந்தேன். எனது பயணம் சிறப்பாக இருக்கிறது” என்று கூறிவிட்டு சென்றார்.

டுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் !!

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...

Leave a Reply