Primary Menu

Top Menu

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கஜோல் மற்றும் அமலாபால்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.


இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்த படத்துக்கு ‘சசி லலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


சசி லலிதா படத்தில் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோலிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். சசிலலிதா படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது.