Primary Menu

Top Menu

தேர்தல் நாளில் தியேட்டர்களுக்கும் லீவு

தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு சம்பளத்துடன் ஏப்ரல் 18 விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் ஆற்றில் 18 காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.