Primary Menu

Top Menu

மீண்டும் மிஷ்கின் படத்தில் விஷால்…!!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக துருக்கியில் நடக்கும் சுந்தர்.சி படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்ற இயக்குநர் மிஷ்கின் விஷாலை சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளன.


இதையடுத்து, மீண்டும் மிஷ்கின் மற்றும் விஷால் கூட்டணியில் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படம் உருவாகவிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே.10ம் தேதி ரிலீசாகவுள்ளது.