Primary Menu

Top Menu

தயாரிப்பாளர்களை புலம்ப விடும் நடிகர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான, வெற்றி என்ற வார்த்தையின் மறுபெயரை கொண்ட இரண்டெழுத்து நடிகருக்கு நிரந்தரமான இடம் இன்னமும் கிடைக்கவில்லையாம்.
நடிகர் தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் தொகையை வாங்கி குவிக்கிறாராம். ஆனால், ஒப்புக்கொண்டபடி அவர் நடிப்பதில்லையாம். அதுபற்றி கேட்பதற்கு சென்றால், அவரை பார்க்க முடிவதில்லை என்று சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.
அந்த நடிகர் நடிப்பதாக கூறி அட்வான்ஸ்சை வாங்கும்போதே இந்த படத்தில் நடிக்க கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டுதான் செக்கை வாங்குவார், அவர் நினைத்த மாதிரியே அந்த படத்தில் நடிக்காமல், டிமிக்கி கொடுத்து விடுவார் என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறுகிறாராம்.
சமீபத்தில் கூட, அவர் படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை என்று அவர் நடித்த படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்களாம். இது எங்கே போய் முடியப்போகுதோ என்று தெரியவில்லையே என்று கிசுகிசுக்கிறார்கள்.

இளமை காதல்-‘ஒரு அடார் லவ்’ சினிமா விமர்சனம்

பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும்...

Leave a Reply