Primary Menu

Top Menu

“கேப்டன் மார்வெல்”-சினிமா விமர்சனம்

1995-ல் ஹலா கிரகத்தில் கீரி இனத்தவருடன் ஸ்டார்போர்ஸ் உறுப்பினராக இருக்கிறார் வெர்ஸ் (ஃப்ரீ லார்சன்). ஜெட் விமானியான வெர்சுக்கு தனது கடந்த கால நினைவுகள் அவ்வப்போது வந்து செல்கிறது. அதீத சக்தி படைத்த வெர்சுக்கு போர் பயிற்சிகளை அளித்து வருகிறார் யோன் ராக் (ஜூட் லா). இந்த நிலையில், தங்களது கிரகத்திற்குள் ஸ்கிரல்ஸ் இனம் புகுந்த தகவல் கிடைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.


இந்த தேடலில் வெர்சும் இடம்பெறுகிறார். அப்போது இரு கும்பலுக்கும் இடையேயான சண்டையில், ஸ்கிரல்ஸ், வெர்ஸை கடத்தி சென்று அவளது மூளையில் இருக்கும் பழைய நினைவுகளை திருட முயற்சிக்கிறார்கள். தன்னையறியாமல் தனக்கும் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் வெர்ஸ், ஸ்கிரல்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சிக்கிறாள்.

அப்போது வெர்ஸ் செல்லும் விண்கலத்தை ஸ்கரல்ஸ் தாக்கிவிட விண்வெளியில் அந்த விண்கலம் வெடித்து, வெர்ஸ் பூமியில் வந்து விழுகிறாள். அங்கு ஷூல்டு ஏஜெண்ட் சாமுவேல் எல்.ஜாக்சன் – வெர்ஸ் இருவரும் சந்திக்கிறார்கள். அதேநேரத்தில் வெர்சை தேடி ஸ்கிரல்ஸ் பூமிக்கு வந்துவிடுகிறது.


கடைசியில், ஸ்கிரல்ஸ் வெர்ஸை தேடி வருவதற்கான காரணம் என்ன? வெர்சுக்கு பழைய நியாபகங்கள் திரும்பியதா? அவர் எப்படி கேப்டன் மார்வெல்லாக மாறுகிறார்? என்பதே படத்தின் படத்தின் மீதிக்கதை.

ஃப்ரீ லார்சன், சாமுவேல் எல்.ஜாக்சன், பென் மெண்டல்சோன், டிஜிமோன் ஹோச்சோ, லீ பேஸ், லக்‌ஷனா லிஞ்ச், ஜூட் லா என அனைத்து கதாபாத்திரங்களுமே அசத்தியிருக்கிறார்கள். சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ சமீபத்தில் மறைந்த நிலையில், இந்த படத்திலும் அவர் சிறப்பு தோற்றம் ஏற்றிருக்கிறார். 


அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் மார்வெல்லின் வழக்கமான சூப்பர் ஹீரோ கதையாக உருவாகி இருக்கிறது. காமெடி, ஆக்‌ஷன், பிரமிப்பு என மற்ற அனைத்து ரசிக்கும்படியாக இருந்தாலும், மற்ற கதைகளில் இருக்கும் ஸ்வாரஸ்யம் சற்றே குறைவு தான். படத்தின் முடிவில் வரும் போஸ்ட் கிரெடிட் ரசிகர்களை கவர்வதுடன், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் பூனை கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

பினார் தோபார்க்கின் பின்னணி இசை, பென் டேவிசின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

தெலுங்கில் வெளியாகும் “கனா”

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து...