‘சேரே’ படத்தில் அசத்திய அமிதாப் பச்சன்!

65

ரூமி ஜாப்ரின் டைரக்‌ஷன்ல உருவாகி வர்ற ‘சேரே’ன்ற இந்தி படத்துல அமிதாப் பச்சன் இப்போ நடிச்சிட்டு இருக்காரு. அதாவது ‘சேரே’ படத்தோட முதல்கட்ட ஷூட்டிங்கின் லாஸ்ட் சீன் ஜூன் 16-ந்தேதி எடுக்கபட்டுச்சி. இந்நிலையில ரசூல் பூக்குட்டி தனது சமூக வலைத்தள பக்கத்துல அமிதாப் பச்சன் பத்தி ஒன்னு சொல்லிருக்காரு.


அது என்னனா,’நடிகர் அமிதாப் பச்சன் சார் வந்து, இந்திய சினிமாவுல மற்றொரு வரலாற்றை பதிவு செஞ்சிருக்காரு. ‘சேரே’ படத்தோட முதற்கட்ட ஷூட்டிங்கின், கடைசி நாள்ல அவர் ஒரே ஷாட்டில பதினான்கு நிமிஷ நீளமான சீன நடிச்சு கொடுத்தாரு,அப்போ ஒட்டுமொத்த படக்குழுவும் எழுந்து நின்னு கை தட்டினாங்க’னு சொல்லிருக்காரு.


இப்போ தமிழ்ல அமிதாப் பச்சன் நடிச்சி வர்ற படம் ‘உயர்ந்த மனிதன்’. இதுல எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறாரு.இந்த படத்தை தமிழ்வாணன் டைரக்ட் பண்ணிருக்காரு.