ஆண்களே வெட்கப்படும் அளவிற்கு பெண்ணாக மாறிய பாலிவுட் நடிகர்

பார்வையாளர்களின் விமர்சனம் ஆண்களே வெட்கப்படும் அளவிற்கு பெண்ணாக மாறிய பாலிவுட் நடிகர் 0.00/5.00

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஆண்களே வெட்கப்படம் அளவிற்கு சிறு மாற்றமின்றி பெண்ணாக வேடமிட்டு நடிக்கவுள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராஜ்குமார் ராவ். இவர் நடிப்பில் வெளியான குயின், நியூட்டன், கை போச்சே, டி டே, ராப்டா, சிட்டி லைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் விருதுகளை வாரி குவித்துள்ளன.

இந்நிலையில் அனுராக் பாசு இயக்கும் லுடோ என்ற புதிய படத்திற்காக அவர் பெண் கெட்டப் போட்டுள்ளார். ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் பெண்ணாக வேடமிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார். இவர் தனது நடிப்பு திறமைக்காக அதிகளவில் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணாக வேடமிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்ட பிறகு ரசிகர்களே குழப்பம் அடைந்துவிட்டனர். அவர் பிரபல நடிகை க்ரிதி சனோன் அல்லது ஆலியா பட் போல் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தும் வருகின்றனர்.