புரோக்கரிடம் ரு.20 லட்சம் பறிகொடுத்த குத்தாட்ட நடிகை!

பார்வையாளர்களின் விமர்சனம் புரோக்கரிடம் ரு.20 லட்சம் பறிகொடுத்த குத்தாட்ட நடிகை! 0.00/5.00

குத்தாட்ட நடிகை ஒருவர், தன்னை காஸ்டிங் புரோக்கர் ஏமாற்றி ரூ.20 லட்சம் பறித்து விட்டதாக கூறியுள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் வாரிசுகள் தவிர சாதாரணமானவர்கள் திறமை இருந்தாலும் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்படி சினிமா வாய்ப்பு தேடி பெரு நகரங்களுக்கு வரும் ஆண், பெண்களை சினிமாவில் சேர்த்து விடும் பணியை காஸ்டிங் ஏஜெண்ட் எனப்படும் புரோக்கர்கள் செய்து வருகிறார்கள்.


குறிப்பிட்ட தொகையை இந்த புரோக்கர்களிடம் கொடுத்தால் சினிமா வாய்ப்புகள் பெற்றுத் தருவார்கள். சிலருக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடும். சிலருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருக்கும். கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காது. அப்படித்தான் பாலிவுட் குத்தாட்ட நடிகை நோரா ஃபதேஹி ரூ.20 லட்சம் பணத்தை பறிகொடுத்துள்ளார்.


கனடாவை சேர்ந்த நோரா ஃபதேஹி தமிழில் பாகுபலி உள்ளிட்ட சில படங்களிலும், இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவர் கூறுகையில், என்னை கனடாவில் இருந்து அழைச்சிட்டு வந்த காஸ்டிங் ஏஜென்சி ரொம்ப மோசம். அவர்கள் சரிவர வழி நடத்தவில்லை. அவர்களால் நான் விளம்பர படங்களில் நடித்து சம்பாதித்த ரூ. 20 லட்சத்தை இழந்தேன், என்று குறிப்பிட்டுள்ளார்.