ஆல்பத்தால் ஜொலிக்கும் சஞ்சனா!

65

தமிழ் சினிமாவுல ரேணிகுண்டா படத்துல நடிச்சது மூலமா நடிகையாக அறிமுகமானவங்க சஞ்சனா சிங். இவங்க தொடர்ந்து பல படங்கள் மற்றும் டி.வி. தொடரில் நடிச்சுட்டு இருக்காங்க. தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி படங்கள்ள நடிச்சிட்டு இருக்குற சஞ்சனாசிங் .இப்போ ப்ரொடியூஸ் பண்ணனும்ன்ற முயற்சியில முதற்கட்டமாக ஆல்பம் ஒண்ண ரெடி பண்ணிருக்காங்க.


சிங்கப்பூர், மற்றும் மும்பையில் சூட் பண்ண இந்த ஆல்பம் புதுமையான வகையில இருக்குமாம். மும்பை பிரபல டி.வி. நட்சத்திரமான சிருஷ்டி மற்றும் ரோகித் சுஷாந்தி இதுல நடிச்சிருக்காங்க. மேலும் பிரபல டிஜே பஞ்சோ குவாபோவும் நடிச்சிருக்காரு.


ஆல்பம் ரெடி பண்ணின சஞ்சனா சிங் கூடிய சீக்கிரமா திரைப்படங்களையும் ப்ரொடியூஸ் பண்ண முடிவு செஞ்சிருக்காராம்.