Tuesday, July 16, 2019
Home Blog

ராட்சசி படக்குழு மீது பள்ளி ஆசிரியர்கள் புகார்…!

கௌதமராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் “ராட்சசி”. இப்படத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக ஜோதிகா நடித்திருந்தார். அரசு பள்ளி ஆசிரியர்களை விமரிசனம் செய்யும் விதத்தில் இந்த படம் அமைந்தது.


இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் கோபமடைந்தார்கள். ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.


அதில், “கடந்த 5ம் தேதி வெளியான ராட்சசி படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேண்டுமென்றே எங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார்கள்.


முற்போக்கு போர்வையில் போலியான விளம்பரம் மூலம் வியாபாரம் தேடும் முயற்சியே ராட்சசி. ஆசிரியர்கள் ஜாதி வெறியை புகுத்துகிறார்கள் என்பது போன்ற தவறான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயச்சியாகும்.


எனவே ராட்சசி படத்தினை தடைசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும். இயக்குனர் கவுதம்ராஜ் மற்றும் வசனகர்த்தா பாரதிதம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் “சிங்கப்பெண்ணே”

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் “பிகில்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கதிர், யோகி பாபு,சத்யராஜ், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் சமூக வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய சிங்கப்பெண்ணே” என்ற பாடல் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


மேலும், இது பற்றிய நியூஸ் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில உள்ளது.

விமலின் “கன்னிராசி” அப்டேட்..!

சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையாத படம் “களவாணி 2”. இந்த படத்தை தொடர்ந்து தற்போது “கன்னிராசி” படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் முடிவடைந்து தற்போது இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் “யு” சான்றிதழ் கொடுத்துள்ளனர்.


இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதன் படி இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளார்கள்.

“ஜெர்ஸி” தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால்…!

தெலுங்கில் கௌதம் இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான படம் “ஜெர்ஸி”. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.


தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதில் நானி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


விஷ்ணு விஷால் தற்போது “இன்று நேற்று நாளை 2” படத்தில் நடித்து வருகிறார்.

துல்கர் சல்மானுக்கு 25வது படமாக அமைந்த தமிழ் படம்..!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர்சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் “. இந்த படத்தில் ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் மற்றும் ரக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படம் குறித்து நடிகர் துல்கர்சல்மான் கூறுகையில், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. அதுவும் தமிழ் படமாக அமைந்தது மகிழ்ச்சி. படத்தில் சொல்லப்படும் காதல், நிச்சயம் ரசிகர்களுக்கு புதிதாகவும், உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நயன்தாராவுக்கு விரைவில் டும் டும் டும்!

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையை வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது விஜய்யுடன் “பிகில் “படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து “லவ் ஆக்சன் டிராமா” படத்தில் நடித்து வருகிறார்.


நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் இருவரும் தனது குடும்பங்களுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டனர்.


இதனை தொடர்ந்து உலக கோப்பை தொடர்பாக பேசி சமூக வலைத்தளங்களில் புகழ் பெற்றவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். சினிமா சம்மந்தமான பல விஷயங்களை சொன்ன இவர் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் நடக்கும் என கூறியுள்ளார்.

“இந்தியன் 2” படத்தில் இணைந்த இளம் கதாநாயகிகள்..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் “இந்தியன் 2”. இதில், காஜல் அகர்வால் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.


மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சனைகள் காரணமாக நடக்காமல் இருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.


இந்நிலையில், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரஹ்மான் இசையில் பாடும் விக்ரம்…?

விக்ரம் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம்”கடாரம் கொண்டான்”. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை 7 கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் “வாயாகம்18” நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலை விக்ரம் பாடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இசைஞானி இசையில் பாடிய சித்ஸ்ரீராம்..!

உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “சைக்கோ” படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கி வருகிறார். தேர்தல் நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால் உதயநிதி இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமுடியவில்லை.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இந்நிலையில், இந்த படத்தில் இசைஞானி இசையில் ஒரு பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் பிசி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில், இளையராஜாவும், மிஷ்கினும் இணைந்து இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார்கள்” என்று பாராட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்…!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “மிஸ்டர் லோக்கல்” படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.


இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கத்தில் “வாழ்” என்ற படத்தை தயாரித்துள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு 75நாட்களில் முடிந்ததாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.

Image

FOLLOW US

47,554FansLike
207FollowersFollow
442FollowersFollow
72,022SubscribersSubscribe

TRAILERS

MOST POPULAR

More

    HOT NEWS