Primary Menu

Top Menu

பிக்பாஸ் 2 டைட்டில் வென்ற நடிகை ரித்விகா!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை நடிகை ரித்விகா வென்றுள்ளார்.

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. நேற்று நிகழ்ச்சியிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார்.

 

மீதமிருக்கும் மூவரில் ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்படுவார். நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளருக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

 

இதற்கான நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது . இந்தச் சூழலில் பிக்பாஸ் ட்ராபியை கையில் வைத்து டேனியலுடன் இருக்கும் ரித்விகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

 

இதன் மூலம் பிக்பாஸில் ரசிகர்கள் விருப்பப்படியே ரித்விகா வெற்றி பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக வாக்குகளின் அடிப்படையில் ஐஸ்வர்யாவை முந்திச் சென்று ரித்விகா முதலிடத்தில் இருந்தார்.

 

மக்கள் அளித்த இந்த வாக்குகள் ரித்விகாவை வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதை காட்டுவதாக அமைந்தது.

டுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் !!

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...

Leave a Reply