Primary Menu

Top Menu

தேசிய விருது பட்டியலில் நடிகை ஸ்ரீபல்லவி

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆனந்த பாண்டி ஆகியோர் நடித்து திரைக்கு வந்த தாதா 87 படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து இருந்தார். பொதுவாக திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இமேஜ் பார்க்காமல் ஸ்ரீபல்லவி இந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து படக்குழுவினரை வியக்க வைத்தார்.


இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.