இளையராஜா பாடியதைப் பார்த்து கண்ணீர் விட்ட மாணவி…!!

பார்வையாளர்களின் விமர்சனம் இளையராஜா பாடியதைப் பார்த்து கண்ணீர் விட்ட மாணவி…!! 0.00/5.00

இளையராஜா பாடியதைப் பார்த்து கல்லூரி மாணவி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது. இளையராஜா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவிகள் கேட்ட பாடலைப் பாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.


தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலைப் பாடுமாறு ஒரு மாணவி கோரிக்கை வைக்க, இளையராஜாவும் பாடத் தொடங்கினார். அவர் பாடப் பாட, ஒரு மாணவிக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைக் கவனித்த இளையராஜா, அந்த மாணவியை அருகில் வருமாறு அழைத்தார்.


”அழறியா? கண்ணீர் வருதா? இதுமாதிரி எத்தனை பேருக்கு வருது. எல்லாருக்கும் வரும். எல்லாருக்கும் வருதா?” என்று மாணவிகளைப் பார்த்துக் கேட்டார்.


அழுத மாணவி, அங்கிருக்கும் மாணவிகளைச் சுட்டிக்காட்டிய பிறகு ”உங்க தாய்களுக்காக ‘தென்பாண்டிச் சீமையில’ பாட்டைப் பாடுங்க சார்” என்று கோரிக்கை வைத்தார். இளையராஜா பாடத் தொடங்க, அந்த மாணவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.