நடிகர் அஜித் ஓர் அறிமுகம்….!!

93

வாழ்க்கைச் சுருக்கம்

அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை  காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

திரை வாழ்க்கை

தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புத்தகம்  என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள் , பவித்ரா , ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா  திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை  திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.