40 வயதை எட்டியது மிகுந்த சந்தோசம் – ஏஞ்சலினா

75

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினாஜோலி, தான் முதியவராகிக் கொண்டிருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் இவ்வருட தொடக்கத்தில் கருப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஏஞ்சலினா, தன்னுடைய மாதவிடாய் காலங்களை தான் மகிழ்ச்சியாகக் கடந்ததாகவும், அது ஒரு பயங்கர நிகழ்வாக நான் ஒரு போதும் கருதியதில்லை, தான் ஒரு அதிர்ஷ்டசாலி என்றும் கூறியுள்ளார்.

40 வயது நிறைந்த ஜோலி முன்னதாக தனது பிறந்தநாளில் கூறியபோது, தனது குடும்பத்துப் பெண்கள் யாரும் இத்தனை வயது வரை உயிருடன் இருந்ததில்லை , 40 வயதிற்கு முன்னதாகவே இறந்து போன நிலையில், தான் மட்டும் இந்த வயதை எட்டி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

பொதுவாகவே பெண்கள் வயது கூடுகிறது என்றால் தனது இளமையும் , அழகும் போகிறதே என்று வருத்தப்படுவதுண்டு, அதிலும் நடிகைகளுக்கு இளமை இருக்கும் வரை தான் வாய்ப்பு.

அநேக நடிகைகள் தங்களது வயதினை மறைக்க முயலுகின்ற போது ஏஞ்செலினா இப்படி கூறியிருப்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தனது மாதவிடாய் பற்றி அவர் கூறியிருப்பதும் தனது கர்ப்பப்பையை நீக்கியமை குறித்தும் அவர் அறிவித்துள்ளது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றாலும் பெண்களிடையே அது மன தைரியத்தை வரவழைக்கும் விஷயமாக உள்ளது.